Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

காலம் கடந்து போச்சு.. நட்பு அரசியல்

- தீபா திருமுர்த்தி

காலம் கடந்து போச்சு.. நட்பு அரசியல்

01.
காலம் கடந்து போச்சு
----------------------------

ஆடிப் பட்டம்
தேடி விதைப்போம்
மணல் மேடு பார்த்து
மடி ஏந்தி வந்து
பணங்கொட்டை

குருத்து கண்டு
கிழங்காகுமுன்
யாரும் அறியாது
கொட்டை பிடுங்கி
வெட்டி தின்போம்
குச்சி செருகி
ஐஸ் கிரீமாய்

காட்டி கொடுத்துவிடும்
பல் விழுந்த கத்தி
காலங்காலமாய் கரும்பு வெட்டி
கடன் தீர்த்ததால்
கை ஓங்கி வரும்
அப்பாவின் தொப்பைக்குள்
விரல் விட்டால்
சிரித்துப் போகும்
களத்துமேடே
சின்னதாய் அப்பாவும்!

கார்த்திகை ஆனால்
கிழங்கு பிடுங்கி
சுள்ளி பொறுக்கித் தீமூட்டுவோம்
குதூகலத்தில்
மறந்தே போய்விடும்
அண்ணனின் 'மெஸ்பில்லும்'
'ஹாஸ்டல் பீசும்'

இந்த வருடம்
மாசியில் வந்திறங்கும்
அண்ணனுக்கு காத்திருந்து
சேரித்தே போனது
வெத்தள வள்ளியும்!

ஆயா உடனான உரையாடலில்
திரும்பிப் பார்க்கிறேன்....
பங்குணியில் இருந்து
பனங்கிழங்கை
வயிற்றுப் பிள்ளைக் காரியாய்
'ஆசைக்கு ஒன்று கூட தின்னவில்லை'!



02.
நட்பு அரசியல்...!
------------------------

அசுத்தமாகிக் கிடக்கிறது
நட்புவெளி!
ஓசோனை முந்திக் கொண்டும்
கிழிந்து படலாம்
நட்புப் படலம்!
சுவாசக் கோளாறுகாலால்
இப்போதே
இறக்கவும் நேரிடலாம்
எவரேனும் மூச்சு திணறி!

வலுவிழந்து வருகின்றன
'தோல்விகளையும்
சுமக்கவிருந்த தோள்கள்!

இருபத்தோராம் நூற்றாண்டு
அகராதியில்
அதிகமாய் இடம் பெறுகின்றன
அபத்த சொற்கள்!

கூடி கூடி நடக்கும்
தண்ணிறைவு ஆலோசனைக் கூட்டங்களில்
தள்ளி வைக்கவும் தவறுவதில்லை
துணை முதல்வரை!

எழுத்துப் பூர்வ
உடன்படிக்கையில்
ஒப்பந்தமிட மறுத்து
ஓடைகள் மீதே
கையெழுதாகிறது
அந்தரங்கச் சட்டங்கள்...
நம்பிக்கை இல்லா தீர்மாணங்கலாய்!

எப்படி புரிந்துக்கொள்வது....
உலகம்
தட்டை இல்லையே!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-07-03


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • புத்துருவாக்கம்.. ஒத்திகை
  • ஈரம் காயும் முன்னே.. யுகங்கள் கடந்தும்
  • துரோகம்.. அந்நியளாய் ஆன கதை
  • துடிக்கும் ஆசைகள்!
  • கலங்கமா கருப்பு?
  • அமுத விஷம்... தீவனம்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube