கலங்கமா கருப்பு?
----------------------------------
இறக்கையின்றி
ஓயாது
பறந்து கொண்டிருக்கும்
ஊரின் உளை வாய்க்கு
ஓய்வு கிடைக்கும்!
மதுவின் போதையில்
பிதற்றிக் கொண்டிருக்கும்
மாமனின்
ஊமைக் கண்களுக்கு
இதுவே ஒத்தடம் தரும்!
தம்பியின்
செவிட்டு வாய்க்கும்
பூட்டு போடும்!
பழுத்துத் தொங்கி கொண்டிருக்கும்
முதிர்ச்சியின் முனகளொடு
கொல்லையின் பலா நாசி நிறைக்கும்...
வாய்க்குவரும்
வயிற்றுக்குப் போகும் வரை!
தோட்டத்து வேலி தாண்டி
வாசம் நிறைக்கும்
அம்மாவும் அப்பாவும்
ஆசையோடு
வளர்த்து வந்த மல்லிகை!
உனது வெள்ளையும்
எனது கருப்பும்
சேர்ந்து விட்டாலே போதும்
புதிய
நிறம் ஒன்று
பிறக்கும்!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-01-01