புத்துருவாக்கம்.. ஒத்திகை
01.
புத்துருவாக்கம்..!
--------------------------
கண்களுக்கு
விருந்து தந்த
மரத் தாயே !
மன்னித்து விடு....
மண்ணின் மைந்தர்களை!
வேந்தர்கள்
உனைக் காக்க....
மைந்தர்களுக்கு மட்டுமேன்
இத்தனை அங்கலாய்ப்பு?
அவசர யுகம்!
வாழ்ந்துவிட்டுப் போவதற்குள்
வரும் சந்ததிகளின்
பெருக்கம்!
காடுகள்
அழிக்கப் பட்டுவிட்டதால்
அழுகிறீர்கள்!
கவலை வேண்டாம் !
இன்றும்
மனிதக் காடுகள் தான்
மண்டிக் கிடக்கின்றனவே!
02.
ஒத்திகை..!
-------------------
அழகிய பதுமை!
ஆம்!
அவள் ஓர்
அழகிய பதுமை!
இயற்கை அழகை
முழுவதும்
விழுங்கிவிட்டுச்
செயற்கை அழகில்
தத்தளிக்கும்....
அவள் ஓர்
அழகிய பதுமை!
அவள் ஓர்
காதல் விருந்து!
அவனும் தான்!
செயற்கை அழகை
மொத்தமாய் தந்துவிட்டு
இயற்கை அழகில்
இணைந்திருக்கும்
அவன்
காதல் நோய்க்கோர்
இலவச மருந்து!
சந்தி செய்யும்
அந்தி!
பேருந்து பயணம்!
ஒளி விழுங்கிய
வானம்
உமிழ்ந்துகொண்டு இருக்கிறது....
மின்னலை!
இருவரயும்
இணைக்கிறது
சில் என வரும்
தென்றல் காற்று!
முடி திருத்துவதாய்
மார்பில்
இடிக்கிறாள்!
சட்டை சரி செய்வதை
அவனும் தான்!
கதகதவென
இதமாகிறது
ஈரக் காற்று.....
இதழ்களின்
இளம் சூட்டிற்கு நிகராய்
தலைகளின்
உராய்வு!
ஏனோ....
இதன் பின்னே
கை கோர்த்து நடக்கிறது....
வழக்கமாய்
திட்டி தீர்க்கும்
மனம்!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-09-13