பிரிவு...
-நாவாந்துறைடானியல் ஜீவா-
விடியாத இரவில்
காத்திருந்தேன்
விண் மீன்கள்,
பால்நிலா...
அந்திப்பொழுதின்
செவ்வாணச்சிவப்பு
பார்க்க அழகாயிருந்தது.
ஆயினும்
கடலோடு மீனவன்
காணமல் போவன்
தெருவில் வந்தவன்
திடீரென மாயமாய்
மறைந்து போவான்
தேசமே சோகமாய் ...
எரியும் நெருப்பிலிருந்து
விலகி,
தொலை தூரப் பிரிதல்.
daniel.jeeva@rogers.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01