Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

காயப்பட்ட அகதியின் கண்ணீர்க் கசிவு..

- நாவாந்துறைடானியல் ஜீவன்

காயப்பட்ட அகதியின் கண்ணீர்க் கசிவு.....
-நாவாந்துறைடானியல் ஜீவா-

என் உள்ளம்
தூங்குகின்றது...
உடல் அசைகின்றது.
நிசப்தம் கலைய
நிற்கிறேன்.
இயத்திரத்தின்
முன்னால்

பஞ்சுக்கட்டை இரண்டால்
காதைஅடைத்து விட்டு
என்ன சத்தமடா
யாழ்ப்பாணத்தில்
கெலிவருவது போல்....
என்று நினைத்தபடி

சின்னஞ் சிறுவயது
அண்ணன்மார்
அதிகரித்ததால்
அவ்வப்போது
பொறுப்பற்று
பொழுதுபோன வாழ்வு.......
பிறப்பென் று சொல்லிக்கொள்ள
என்னைப் போல்
இடிந்து போன
எனது ஊர்........

காலைக்கதிரவன்
கண்விழித்தானோ என்னவோ
பிறப்போடு எனக்கு
இருளானது.

பருவங்கள்
மாறிவிலகிச்செல்ல
ஒவ்வொரு தேசமாய்
என் இருப்பு....
எனக்கேது முகவா¤..?

இயக்கமின்றி
இயங்கும்
என் வாழ்வின் துயா¤ல்
ஒவ்வொரு கணமும்
போரிடும் மனவிறுக்கம்

என் மனவீதியில்
பால்நிலாவொன்று
பரவசமாய் விரிகின்றது
அந்தக்கணமே
வண்ணத்திப்பூச்சி போல்
திசை தெரியாமல் மனம்

மிதிபடுகின்றது
என் கனவுகள்....
அழுகையோடு
அம்மாவின் நினைவுகள்.

என்னுள் வேரோடி
என் மனதை
அழுத்திக்கொண்டிக்கின்றது
ஒருவார்த்தை
மனித நேசிப்பு
இப்பூமியில்
எப்படி சாத்தியப்படும்
என்ற வினாவெழுப்பியபடி

அச்சம் ஊடறுத்து
உயிர்த்தெழுதல்
சாத்தியப்படதா போதும்
பிலாத்துவைப் போல்
கைகழுவ
ஈரமான இதயம்
இடங்கொடுக்க மறுக்கிறது

என் ஜீவனத்திற்குரிய
உயீர்......
எத்தனை
நெருக்குதலுக்குள்

என்னால்
தனித்து வாழமுடியாது
என்பதை
இந்தக்கணப்பொழுதில்
உணர்கிறேன்....

பகல் முழுவதும்
து£ங்குவதே
கடமையாயின
இரவு வேலையே
என் இருப்பை
அடையாளப்படுத்துகின்றது.

இயத்திரத்தின்
மேலே
வலப்பக்கமாக.....
நிலாபோன்ற
வெள்ளை நிற
மின் விளக்கு
அந்த வெளிச்சத்தை தேடி
தும்பி போன்ற பறவை
பறந்து கொண்டிருந்தது

என் பார்வையை
விலக்காமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்
ஒரு நொடிப் பொழுதுதான்
சுருண்டு சுருண்டு
கீழ் நோக் கி வந்து
என் காலடியில்
விழுந்தது....
சூட்டு காயங்களுடன்
வீதியில் வீசப்பட்ட
என் தோழனின்
உடல் போல்....
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • பிரிவு
  • உன்னில் உறைந்து போனேன்.
  • இப்போது உனக்காக..
  • நிலவோடு நீ வருவாய்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube