Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

இப்போது உனக்காக..

- நாவாந்துறைடானியல் ஜீவன்

இப்போது உனக்காக...

-நாவாந்துறை டானியல் ஜீவா-

கனவுருகும்
காலைப் பொழுதில்..
அவள் வந்து போவள்.. ..
நானிருக்கும் தேசம்
நீண்ட இருளில்
மூழ்கும் போது...
காதல் எப்படி
என்னுள்...
எழுச்சிகொள்ளும்..


எழுதுவதற்கும்
எழும்புவதற்கும்..
சோம்பறித்தனத்தில்
கண்களை மூடிக் கொண்டு
கட்டிலில்
உடலைத்தளரவிட்டேன்.


ஓசையற்று
உறங்கிக் கிடந்த
எனது ஊரில்
அந்நிய முகங்களைக்கண்டு
அவசரமாய்
நாய்கள் ஊளையிட
ஊரேவிழித்தது.
இன்று மட்டுமல்ல
எங்கள் வாழ்வே
இப்படியாகிவிட்டது..


எலிக்காது போல்
என்காதுகளும்
மனக்கண்களும்
விழித்தன...


எங்கோ..
எழுந்த அழுகுரலோடு
பின்னால் துப்பாக்கி வேட்டு
தப்பிக்காமல்
தலையை குறிபார்த்திருக்கலாம்.


அதன் பின்
வாகனம்..
இரைச்சலோடு
புறப்பட்ட வேக ஒலியைத்தவிர
அந்தப்பின்னிரவு
அடங்கிப்போனது.


விடிந்ததும்
முகம் கழுவ
முகத்தோடு பலர்..
நானும் அவர்களில்
ஒருவன்
காலை விழிப்போடு
காற்றும் வாங்கும்
காலம்
காலவரையற்று
காணமல் போய் விட்டது.


யாருபெற்ற பிள்ளையோ
நானறியேன்..
வெட்டிப்பிளந்து
வேடிக்கை பார்ப்பதற்காகவா
போசக்குணவுண்டு
பத்து மாதம் சுமந்தாய்
உன் மகனை...


இந்த மண்ணை நேசித்த
இந்முகத்த உன்மகன்
சுக்குநூறாய்
சுருங்கிப் போவதற்காகவா
சுடு மணலில்
நார்க்கடகம் சுமந்து
நாளாந்தம்
மீன் விற்றாய்.


புனிதப் படுகையில்
போர்த்துக்கிடந்த
வெள்ளை மனங்கள்
வெளுத்துப்போனது
எப்படி?


வாயிருந்தும்
வார்த்தையிழந்து..
எனது வீதியில்
நடைப்பிணமாய்
நான் அலைந்ததை
உனக்குத்தெரியுமா?


இப்போது
உனக்காக எதைச்செய்வேன்
அழுவதைத்தவிர...

daniel.jeeva@rogers.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-04-30


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • காயப்பட்ட அகதியின் கண்ணீர்க் கசிவு..
  • பிரிவு
  • உன்னில் உறைந்து போனேன்.
  • நிலவோடு நீ வருவாய்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube