துரோகம்.. அந்நியளாய் ஆன கதை
01.
துரோகம்...!
--------------------
ஒவ்வொரு
பேருந்து புகைக்கும்பின்னால்
ஆண்மை கலந்த
உன் வாசம்
வருகிறதா என
எதிர்பார்த்துக்
கழிந்த காலங்களை எல்லாம்
கட்டி இழுத்து வந்து
முட்டி மோதி
ஒட்டிப் பார்க்கிறேன்..,
நீ
வந்த பிறகும்
வழக்கமான
உன் வாசம்
வாடகைக்கு விடப்பட்டதாய்...,
மொத்தமாய்
விற்றுத் தீர்க்கப்பட்டதாய்....
உணர்கிறேன்!
வழி நெடுகிலும்
சவப் பூக்களின்
தூவல்!
கண்பூக்களில்
நேச இதழ்களின் காவல்!
எனக்குத் தெரியும்
மண் மூட்டை சுமக்கும்
நீ
மரகதங்களின்
மகத்துவம் அறியவாப் போகிறாய்?
மனத்துக்குள்
பூத்த ஈரம்...!
மெத்தைக்குப்
புதிய மல்லிகை!
02.
அந்நியளாய் ஆன கதை....!
----------------------------------------
உடல் நலமும்
உளநலமும்
உனதன்றி போன
ஒருநாளில்
உனை நோக்கிச் சிறகடித்த
மனப் பறவை
இல்லம் கொண்டும் சேர்த்தது!
உள்ளே வர
அனுமதி கேட்கும் விதமாய்...,
கதவுத் தட்டலின்
ஓசை!
உதறித்தள்ளியது
உறக்கச் சிறையிலிருந்த
உனது விழிகளை!
மெதுவாய்
விழி திறந்தாய்!
வழக்கமான
விசாரிப்புகழுக்கிடையே
சமயலறை நிறைத்தன
பையிலிருந்த
உணவு டப்பாக்கள்!
உணவளித்துவிட்டு
உடனே கிளம்பிவிடுவதாய்த் தான்
உச்சரித்தது உள்ளம்
முதலில்...,
வேண்டாமென நாச்ரித்தது
அடுத்தடுத்த நிமிடங்களில்
அதே உள்ளம்!
சாப்பிட எழுப்பும் போதெல்லாம்
தலைவலியும்
கைகால் குடைச்சலும்
குடைந்தெடுப்பதாய்
உரைத்தாய்!
எனக்கும்
ஆசைதான்!
தைலம் தேய்க்க....
நிமிர்த்தி உட்காரவைத்து
பல் தேய்த்து விட்டு
கைத்தாங்களாய்
அழைத்துச்சென்று
வாய் கொப்பளித்துவிட!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-11-19