அகங்களும் முகங்களும்..கட்டில் சிலந்தி
01.
அகங்களும் முகங்களும்
---------------------------------------
பேச்சில் ஒன்று மூச்சில் ஒன்று
அகத்தில் ஒன்று முகத்தில் ஒன்று
வாழ்வின் உயர்வினை அறுத்து
வளைந்து கடிக்கிறது விச நாகங்கள்
கடித்த பின்பே விழி திறந்தேன்
பயனேதும் இல்லை
புலன்கள் அடைக்கப்பட்டுவிட்டன
ஜீவன் அற்ற உடலை சுட்டெரித்து
சுற்றத்தை சுத்தம் செய்யும் தீயே
உடல் பட்டளிந்து போகும் முன்பே
நேர் கெட்ட அகங்களையும் சீர் படுத்து
பாதகரை பரமபிதாவின் பக்கம்
செல்ல விடாதே
பாவத்தின் சம்பளத்தை
நீயே கொடுத்துவிடு
பருத்த பலாவில் முகத்தில் முள்ளிருந்தும்
அகத்தில் தருகிறது அது இனிய சுளைகளை
மனிதம் கொல்பவர் மனிதரல்ல
புனித மதங்களின் பிள்ளைகளும் அல்ல
இருளை அழிக்கும் விடிவான் விளக்கைபோல்
இவர்களை நீ அழித்துவிடு
முள் வளர்க்கும் அகங்கள்
இனியாவது இனிய சுளையாகட்டும்
உள்ளக் கதவை மெல்லத் திறந்து
புனிதர் ஆவார் எல்லோரும்.
02.
கட்டில் சிலந்தி
-----------------------
கட்டில் சிலந்தி ஒன்று
ஈமெயில் கொடுத்தது
மெல்லத் திறந்தேன்
செவ்வான ஒளி நின்று
மெத்தை வலை விரித்து
விழி மெளசால்
சிருங்கார அழைப்பு விடுகிறாள் ஆளுக்கொரு பணத் தாலி கட்டி
இவள் மேனியை புற்றெடுக்கும்
காமக் கறையான்களால்
உயிரணுக்கள் இவளுக்குள்ளே
செம்புத் தண்ணீர் ரோடு
பஞ்சாயத்து பண்ணி
உயிர் கொல்லி எய்ட்ச்சை
நாத்து மேட்டில் விதைத்து
நீர் தெளித்து
மெளனித்து காத்திருக்கிறது
இவளின் நாளைய மணவாளன்
எய்ட்ச் எனும் கொடிய நாயகனே
மரண மாலையோடு
விரகதாப விசை புயலாய்
மலர் மஞ்சத்தில் காத்திருக்கிறான்
அந்த மரண தேவன்
முந்தானை வைப்பகத்தில்
இவள் நோட்டுக் கட்டுகளை
எண்ண எண்ண
இவளின் ஆயுள் காலங்கள்
கழிக்கப்படுகின்றன
விட்டில்களே வீழ்ந்து விடாதீர்
மெத்தை வலையில் விசச் சிலந்தி.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-11-19