மலரின் மரணம்..அடிச் சுவடுகள்
01.
மலரின் மரணம்
-----------------------
மலரே...
நீ அழகே அழகு
மொட்டாக இருக்கையில்
தொட்டதில்லை சூரியனும்
உன் பட்டு இதழ்களை
சிட்டுக்களின் மகுடியில்
மொட்டுதழை ஏன் விரித்தாய்
பட்டுக்குஞ்சம் நடுவே
நீ சொட்டுத் தேன் கொடுத்தாலும்
சிட்டுக்கள் உன்னிதழ்கள் மேல்
வைத்துப் போவது
ரணங்களின் வடுவே
அழகெல்லாம் உன்னிடம் கொடுத்தவன்
ஆயுளை ஏன் சுருங்கக் கொடுத்தான்
துயரக் கடலில் நீ
மூழ்குவதை கண்டுதானோ.
02.
அடிச் சுவடுகள்
------------------------
அகரத்தின் மூலம் ஆணா பெண்ணா
விடியாத விவாதங்களுக்குள்
இன்னும் மனிதன்
காத்தில் நடக்கிறது உலகம்
விதி விட்ட வழியென்று
வீழ்ந்து கிடக்கிறான் மூடன்
வாழ்வுக்கு ஒரு வசந்தம்
வாசலில் வருவதில்லை
வாடகை வீட்டிலே
தேனீக்கள் வாழ்வதில்லை
உரம் உள்ள உன் நெஞ்சால்
புறம் எரிப்பதை நிறுத்து
ஊரோடு நீ இருந்தால்
வேர்ரோடு வாழல்லாம்
விழியால் நனைந்த இமைகள்
யுரத்தில் மாண்டதுண்டா
காய்த்த கனிகளை
கொடை கொடுத்த மரம்
ஏழையாய் போனதுண்டா
எண்ணத்தின் அலைகளோ
உள்ளத்தில் நூறு
இருந்தாலும் இறந்தாலும்
உள்ளம் என்றும் ஒன்றுதான்
பயணம் முடிந்துவிடும்
பாதைகள் முடிவதில்லை
என் உறவே
எங்கே நீ
உன் சுவடுகளை தேடுகிறேன்.
03.
புனிதன் எவன்
----------------------
மனிதனை மனிதன் தின்கிறான்
புன்னகை ஒன்றுக்குள்
பூகம்பம் வளர்த்து
சுவாசம் கொள்கிறான்
யாரடா மனிதன் இங்கே
எனக் கேட்டால்
அவன் தான்தான் என்கிறான்
புனிதன் எவன் என்று
எப்படி காண்பேன் இறைவா
படைத்திட ஒருவன்
காத்திட ஒருவன்
அழித்திட ஒருவன்
மூன்று தெய்வங்களே
உங்களின் தொழிலை
புணர்ச்சியில் படைப்பும்
உளைப்பில் காத்தலும்
அகம்பாவத்தில் அழித்தலும்
இவனே செய்கிறான்
இறைவா உன்னிடத்தில் இவன்
எப்போது கூலிக்கு சேர்ந்தான்
உளைப்புக்கு கூலி யார் கொடுப்பது
கொடியவன் இறைவனா மனிதனா
புனிதன் எவன் என்று
எங்கே தேடுவேன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-07-03