Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

ஈரம் காயும் முன்னே.. யுகங்கள் கடந்தும்

- தீபா திருமுர்த்தி

ஈரம் காயும் முன்னே உலர்த்தல் நடவடிக்கை!.. யுகங்கள் கடந்தும்


01.
ஈரம் காயும் முன்னே உலர்த்தல் நடவடிக்கை!
-----------------------------------------------------------------

காவிரியும்
கருநாடகமும்
நின்றவிடத்தில் நின்றிருக்க
தொடரும் பயணங்கள்
சங்கமிக்கவா?
மூழ்கடிக்கவா?

எண்பதாயிரம்
எழுத்தாணிகள்
எடுத்தெரியப்பட்டு
மீதமிருக்கும் முப்பதாயிரமும்
முள்வேளிக்குள்!

தமிழநின்
கச்சத் தீவு - இன்று
சர்ச்சை தீவாய்!

பெருமைப்பட்டுக் கொள்வோம்
இருபத்தோராம் நூற்றாண்டின்
இணையற்ற மனித உரிமை மீறல்
ஈழப் போர்!
வன்கொடுமை தடுப்பார்
யார்?

"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா"!
எங்கே நிற்பது?
பிணத்தின் மீதும்
எலும்புக் கூடுகளிலுமா?

இறந்து போன சுரப்பிகளில்
பால் தேடிக்
கதறிய
மழலையின் கண்ணீர்
கன்னங்கள் தொடவும்
தயக்கம்!
தொலைந்து போன
உறக்கம்!

பொறுப்புமிக்க காவலிடம்
கற்பு பறிப்போன
கதறலின் காட்சி
நித்திரை கொள்ளவில்லை
மனத்திரையில்!

காக்கையின்
தர்ப்பநந் சோற்று
பருக்கை கூட
பல்லுக்குக் கிட்டா
அவலத்தின்
ஓலம்!

பஞ்சம் மட்டுமா
துரத்தியது?
நைந்த நெஞ்சங்களுமல்லாவோ
விரட்டியடித்தன?

காது கிழித்த
குண்டுகள் - அங்கே
உயிர் தேடி துளைத்தன...
தையல் இட்டுக் கொண்டோம்
காது மாடளொடு சேர்த்து
நாம்!
அவர்கள்?

நிழலாடும் நிஜங்கள்
வெயில் மறைவுப் பிரதேசங்களில்
ஒளிந்திருக்கும் உன்னதம்!

வேரோடு பிடுங்கிய
விருட்சத்தின் விதைகள்
மூளை விடுவதற்குள்
கடல் மயமாக்கும்
காட்சித் திட்டம்!

காயத்தின் கண்களில்
கண்ணீர் காயும் முன்னே
உலர்த்தல் நடவடிக்கை...
இதுவே
உலகத் தமிழ்
செம்மொழி மாநாட்டின்
அறிவிக்கை!

செம்மொழி மாநாட்டிநாரின்
செல்லப் பிள்ளைகளின்
நாவில்
ஆங்கிலமும்
இந்தியுமன்றோ
கை குலுக்கிக் கொள்கின்றன!

"தமிழனைக் கொல்!
தானாய் வளரும் தமிழ்ப் பயிர்"!
இதுவன்றோ
ஏட்டில் ஏறா
தேசிய கீதமின்று!
தமிழ் வேதமின்று!

இளைப்பாரலும் ...
களைப்பாரலும்...
கண்டு...
உண்டு...
களித்தலுமே
நித்தம்
நினைவுக் கோப்பையில்
நிரம்பி வழியும்
நிலைக் கலன்கள்!

கோழி கிளரும்
குப்பைய்யாய் கூட
சீய்த்துப் பார்க்க
மறந்து போன மனிதம்!
ஆம்!
மறுத்துப் போன மனிதம்!

நேயம் மறந்த
மனிதத்தின் புறப்பாடு....!
செம்மொழி மாநாடு!



02.
யுகங்கள் கடந்தும்
-------------------------

உன்னுடனே
சிந்திக்கிறேன்...
கடந்துவந்த
பாட்டைகளையும்...
கடக்கவிருக்கும்
பாதைகளையும்!
தயக்கங்கள் சற்றே
கலங்க வைத்தாலும்
மயக்கம் மட்டும்
மதி கெட்டுப் போவதில்லை!
ஐந்து வயதில்
அடிபட்டு...
ஆழமாய் பதிந்துபோன வடு
ஆறாமல் வருத்துகிறது ...
உன்
விரல் பட்டு
ஒருநாள்
உணர்வு பெற்றதாய்
ஞாபகம்
அவ்விடம்!
நகக்கனுதான் என்றாலும்
நினைக்கையில்
நெருடல்தானே!
உயரப் பறக்கும் கொடியை
அண்ணார்ந்துப் பார்த்துப்
பெருமூச்சேரிந்து விட்டு
செல்லும் முடவனின்
கைத்தடியாய்...
தொட்டுப் பார்க்கத்
துடிக்கும்
தோள்களையும்
காத்திருந்து
கட்டிக்கொள்ள
கனாக் காண்கிறது...
கள்ள உள்ளம்!
எண்ணெய்த் தாளில்
மொய்த்து இறக்கும்
ஈக்கள் அல்ல
நினைவுகள்!
உளுத்தங்கஞ்சியின்
தேம்போடே
தொடரும்...
யுகங்கள் கடந்தும்!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-10-02


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • புத்துருவாக்கம்.. ஒத்திகை
  • துரோகம்.. அந்நியளாய் ஆன கதை
  • துடிக்கும் ஆசைகள்!
  • கலங்கமா கருப்பு?
  • காலம் கடந்து போச்சு.. நட்பு அரசியல்
  • அமுத விஷம்... தீவனம்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube