Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

நிரம்பி வழிதலின் துயரம்

- ஹெச்.ஜி.ரசூல்

நிரம்பி வழிதலின் துயரம்
-----------------------------

என் மெளனங்களையும்

நழுவித் தவழும் அலைகளையும்

கைப்பிடித்து விளையாடியதோடு

இந்த கணம் நின்றுவிடவில்லை.

பேரலைகளையும்

சிற்றலைகளையும் வருடி

இசைப்பேரொலியை

ஊற்றாகப் பெருக்கினேன்

காற்றின் திசைவழியைக் கண்டறிந்து

ஒரு பறவை இருளில் மறைகிறது.

ஒற்றைவால்நட்சத்திரத்தால் பொழுதறிந்த

இரவு பகலற்ற நெடும்பயணத்தில்

ஆயுள் உருகி வழிந்தோடுகிறது.

பேரிடி இரைச்சல்களின்

இடிபாடுகளுக்கிடையே

தொலைந்து போன

என் குழந்தையின் புன்னகையைத்

தேடிக் கொண்டிருக்கிறேன்.

விசித்திரக்கடலுக்குள்

உயிர்பிடித்து அழைத்துச் சென்றாய்

மீனாய் வாழ முடியவில்லை.

அலைகள் துப்பிய சடலமாய்

கடலோரம் ஒதுங்கிக் கிடக்கிறேன்.

இன்றும் விடிந்த பொழுது

எனக்கென்று இல்லாமல் போக

அழுகிய உதடுகளிலும்

உருத்தெரியா கன்னங்களிலும்

ஒரு முத்தம்தர முயல

பிணங்களால் நிரப்பப் படுகிறது கடல்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-12-02


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கறவை
  • நீலக்கண்கள் சூடிய வினோத பட்சி
  • ஹவ்வா
  • அறைக்குள் மெளனம்
  • ஒளியென்று சொல்ல எதுவுமில்லை
  • உறைந்த தேவதைகள்
  • குட்டிப் பூனையாக அலைகிறது பொம்மை
  • துரோகத்தின் தருணம்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube