Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

ஒளியென்று சொல்ல எதுவுமில்லை

- ஹெச்.ஜி.ரசூல்

ஒளியென்றுசொல்லஎதுவுமில்லை
-------------------------------------

எனக்கொரு படுக்கை தயாராயிருந்தது.
மூடிய மண்ணுக்குள்ளிருந்து
பிரபஞ்சத்தை பார்க்க
எந்தவித ஜன்னலும் இல்லை.
இரவும்பகலும் மாறிமாறிச் சுழல்வதை
அறியமுடியாததொரு தருணத்தில்
தனிமையின் தீராதவலி.
பேச்சுத்துணைக்கு ஆளற்ற வனத்தில்
காற்றின்ஓசையும்
தலைவிரித்தாடும் மரங்களின் சலசலப்பும்
விட்டுவிட்டுதொடரும் பீதியென
விரல்நீட்டிப்பார்க்கமறுத்த
வேர்களின் நுனியில்
மெளனம் நிரப்பப்பட்டது.
இமைவிரித்து மூடும் கணங்களில்
எவ்வித சலனமுமற்று
கும்மிருட்டுப்பயம் தேங்கிக்கிடக்கும்
ஒளியென்று சொல்ல எதுவுமில்லை
மெல்லகசிந்துவந்த ஊற்று
என்னுடலை நனத்துக்கொண்டிருந்தது.

-ஹெச்.ஜி.ரசூல்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-03-10


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கறவை
  • நீலக்கண்கள் சூடிய வினோத பட்சி
  • ஹவ்வா
  • அறைக்குள் மெளனம்
  • உறைந்த தேவதைகள்
  • குட்டிப் பூனையாக அலைகிறது பொம்மை
  • நிரம்பி வழிதலின் துயரம்
  • துரோகத்தின் தருணம்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube