அள்ளக் குறையாத பாலூற்றின்
அமுத சுரபிகள்-காம்புகள்
மூக்குத் துவாரங்களில்
மூக்கணாங் கயிறுகள்
விரிக்கும் உதடுகளில் வாய்கூடுகள்
வைக்கோல் கன்றுகளை
கண்களில் காட்டி
கறவை நடக்கும் கள்ளத்தனமாய்.
தாக இளைப்பொடு
கன்றின் வயிறுகள்
நீர்த்துப்போகாத மௌனம்
பசுமடியின் காம்புகளில்
இப்போது கசிகிறது ரத்தம்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01