Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

உன்னைப் போலவே.. கனவு

- கனிகை

உன்னைப் போலவே.. கனவு

01.
உன்னைப் போலவே
---------------------

உன்னைப் பார்ப்பதற்காய்
சாளரம் திறந்து
காற்றை உள் இழுக்கின்றேன்
வழமை போல் ஏக்கமுடன்
சிமிட்டிச் சிமிட்டி ஒளிர்கின்றாய்
என் தோழியைப் போல
உன் வருகை எனக்கு
அவளையே நினைவுறுத்தும்
வந்தவை தவிர்த்துப்
பேரங்கள் பேசி
இன்றவள் இரந்து
கையேந்தி நிற்கின்றாள்
ஒரு கல்யாண மாலைக்காக
அது பெற்றவரெல்லாம்
பாக்கியசாலிகளல்ல என்பது
எனக்குத்தெரிந்தும்
இரக்காதே எனக்கூற
என்னிடமோ தைரியமில்லை
நான் சொன்னால் அவள்
கேட்டிடுவாளென்ற
சொட்டு நம்பிக்கையும்
என்னிடமில்லை
திருமணம் தான்
சொர்க்கத்தின் வாசலெனும்
சமுதாயப் பிரதிநிதிகள் நாங்கள்
எப்படி தவிர்த்திட முடியும்
அவளே நீயாகத் தெரிகின்றாய்
கிளி குருவி குரும்பட்டிச் சாத்திரம்
கேட்டுக் கேட்டு
அவளுடனே காத்திருந்தேன்
ஒளிக்கீற்றின் ஒரு பொட்டேனும்
தெரிகின்ற அசுமாத்தம்
இல்லவேயில்லை
சந்தடியற்ற இரவுகளைத்
தனதாக்கி விழி மூடாது
எல்லையுடைக்கும்
மனதை அரவணைத்து
ஆறுதல் சொல்லி
காலத்தின் நகர்வையெண்ணி
பெருமூச்செறிவாள்
நேரம் ஆக இரவும் குறையும்
நீயும் ஒளி மங்கிப் போவாய்
என் தோழியும்… உன்னைப் போலவே



02.
கனவு
----------

ஓங்கி ஆர்ப்பரித்து நீர் சிதைத்துப்
தொப்பென வீழ்ந்து
புரண்டலைந்தது அலை
வாரியிறைத்த புளுதி சுமந்து
மூசி மூசிக் காற்றும் சுழன்றது

வாளாதிருந்தது மானிடம்

சிருங்கார நிழல் சுமந்த
மாமரமெல்லாம் பாறி முறிந்து வீழ்ந்தது
அச்சம் எங்கும் அச்சம்

மென்மை ரூபமென்றவரெல்லாம்
வாய் பிளந்து பின் ஒடுங்கி நிற்க
வீச்சுக் கூடி வானம் அசைந்தது

தட்டுமுட்டுச் சாமானுடன்
சமையலறைப் பாத்திரங்கள் உருண்டு
மூலை தேடியொழித்தன
தாவியோடி யன்னல் சாத்தக்
கைகள் கிழித்துக் குருதி பாய்ந்தது

மாசுற்றதால்
கௌரவம் அம்மணமாயிற்றென்றவரே
கஞ்சல் குப்பை கலந்து
வேஷங்கள் களைந்து
தலைவிரித்தாடுகின்றேன்

பார்த்துப் போ; அடங்கிப் போ
உக்கிரச் சொல்லின் தீப்பிழம்புகள்
காதுமடல் எரித்தன

ஐயோ!

எங்கோ ஓர் ஆண்மைச் செருமல்
ஒருக்கழித்துப் படுத்துக் கொண்டாள்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-05-14


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • நல்லதொரு சினேகம்
  • பயணம்
  • செஞ்சோலைக் குஞ்சுகளே!
  • அழிந்தது நீங்களல்ல அம்மா!
  • மண்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube