பயணம்
பேரூந்திற்காக நின்றேன்;
வந்தது;
ஏறிக்கொண்டேன்;
சனநெரிசல்;
திக்குமுக்காட்டம்;
இடம் தந்தாய்;
சிநேகமானாய்;
என் பொதிகள் அழுத்தின;
நீ சுமந்தாய்;
நெருக்கமானேன்;
உண்ணக் கடலை தந்தாய்;
வாங்கிக் கொண்டேன்;
யாவருடனும் உரையாடினாய்;
மௌனித்தாய்;
உதவினாய்;
சிந்தை வயப்பட்டாய்;
வாழ்வு சொன்னாய்;
பரபரப்பானாய்;
அடிக்கடி பார்த்தாய்;
கேள்விக் கண்ணானேன்;
இறங்கி நடந்தாய்;
மறிக்கத்தோன்றவில்லை;
நான் இறங்கவுமில்லை;
யாவரும் இரங்கினர்;
நான் வெற்றிருக்கை பார்த்தேன்.
கனிகை
- கனிகை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-04