Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

முகங்கள்

- இரா.பழனி குமார்

முகங்கள்
------------------

கருவினில் உருவாகி உயிராக
உதித்திடும் உண்மை முகம் !
பள்ளியில் பயின்றிட பாதம்
பதித்திடும் பால்ய முகம் !
கல்லூரிக் காலத்தை களிப்புடனே
கடந்திடும் இளமை முகம் !
கனவுகள் நிறைந்த நெஞ்சோடு
மணக்கோலம் காணும் முகம் !
மக்கட்பேறு பெறுவதால் பேரின்பம்
பெற்றிடும் பெருமைமிகு முகம் !
வளர்த்திட்ட செல்வங்கள் வளமாக
வாழ்ந்திட வழிகாட்டும் முகம் !
ஓய்வுறும் வயதானால் வாடியமுகமோடு
ஓய்வுபெறும் ஓய்வறியா முகம் !
பெற்றவைப் பெற்றதை கொஞ்சி
மகிழ்ந்திட்டு மலர்ந்திடும் முகம் !
கடந்தகால நினைவுடனே காலத்தைக்
கழித்திடும் களைப்படைந்த முகம் !
முடியும் வாழ்வினை வரவேற்கக்
காத்திருக்கும் களையிழந்த முகம் !
உயிரற்ற உடலாக உறவும்ஊரும்
வழியனுப்பும் இறுதி முகம் !
மறைவிற்குப் பின்னாலே உற்றராரும்
மற்றோரும் மறந்திடும் முகம் !
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-04-16


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • நண்பர்கள்
  • தாய்மொழி
  • ஊன்றுகோல்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube