ஒரு கட்டில் காமம்
---------------------------
இராக்கிய
கவிதையழகி நான்….
ஒரு கோப்பை நிறைய
சாம்பல் வைத்திருக்கிறேன்
பட்டம் பெற்ற ….
சான்றிதல்கள்;
இறந்தோ…அல்லது
உயிரோடிருந்தோ தகவல்
தொலைந்து போயிருந்தது
அவருக்கு………
முலை காயுமுன்னமே
முந்தானை கழயப்படுகின்ற
ராவுகள்…..
நாண பொத்தான்கள் அவிழ்க்கப்படுகின்றது
உய்தழுக்காகவே
உறைந்து கிடக்கிறேன்.
காமவேர்வையில்
காலம் திண்ணும் இவர்களிடம்
என் மகளின்
பசி பற்றி
எப்படிச் சொல்வேன் ? ? ?
-இல்யாஸ் இப்றாலெவ்வை
இலங்கை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-10-12