ஹத்தாமா.. வித்தை தெரிந்த வியாபாரி
01.
ஹத்தாமா ,,,, ( மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைக்காரி )
---------------------------------------------------------------------------------
இங்கு மின்சாரம் இல்லாமல்
இயங்கும் இயந்திரம் நான்
துன்பங்களை குத்தகைக்கு எடுத்து
இன்பங்களை அவர்களுக்கு கொடுக்கும்
இக்கட்டுக்கு தள்ளப்பட்டு
வாழ்வின் முகவரி அற்றவள்
பெற்றோர் சிந்திக்காத குடும்ப பொருளாதாரம்
சகோதர சகோதரிகளின் சுயநலம்
இரவில் மட்டும் ஆணாகும்
கணவனின் பலவீனம் எல்லாமே
இந்த பெயருக்குள் தள்ளி விட்டது என்னை
கடவுச்சீட்டில் கடன் பட்டு
கடல் கடந்து
காலங்களை கண்ணீரில் கழுவும் துர்ப்பாக்கியவாதி
இங்கு புதுவிதம்
அதிலும் பலவிதம் - இவர்களின்
சீண்டலுக்கும் முரண்பாடுகளுக்கும் பலி தீர்க்கும்
பொதுத்தண்டனை வாங்கி ,,,,
ஊருக்கென்ன தெரியும் ஒரு கணம் மனசு
தெரிந்தும் என்ன செய்ய ,,,,
ஒப்பாரி இரவுகளின் சொந்தக்காரி நான் .
02.
வித்தை தெரிந்த வியாபாரி
-------------------------------------------
வாயோடு முடிச்சுப்போட்டு
வயிறு நிரப்பியும் நிரப்பாமலும் பாம்புகள்
சுருண்டும் விரிந்தும் கிடக்கிறது
வித்தைகள் தெரிந்தவர் பாம்புகளை
திறுக்கிக் கட்டுகிறார்
வயதான பாம்புகள் பற்கள்
விழுந்திருக்கும் இல்லையெனில் புடிங்கி இருப்பார்
பெரிய முட்டைகள்
இட்டிருக்கிறது உடையாமல் கையால்கிறார்
நம்பித்தான் வங்கிச்செல்கிறார்கள்
மருமகனும் வங்கிச்செல்கிறார்
அரசியல்வாதிகளின் வாக்குறிதிகள் போல
வீடு செறுமுன்னே உடைந்து
காற்றோடு கலந்து விட்டது
எங்கு தேடுவது
பலூன் வியாபாரியும் இல்லை
அவர்களும் மறந்தும் விட்டார்கள்
வேறொருவர் வருவார்
வாக்குறுதிகளைத் தந்துவிட்டு
பலூன்களை விற்றுச்செல்வார்
மருமகனும் அவர்களும் தேடுகிறார்கள்
காற்றில் கலந்ததையும் தொலைந்தவர்களையும்
தோல்கள் மட்டும் அவனிடம்
வெறுமனே அவர்கள் அடுத்த
முறை வரட்டும் பலூன்
வியாபாரியும் தேர்தலும் ,,,,
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2014-12-31