உண்மைகள் மறைக்கப்படும் நாளைகளுக்கான அவர்களுக்கு .. காலநிலை கசிந்த இரண்டாவது பயணம்
01.
உண்மைகள் மறைக்கப்படும் நாளைகளுக்கான அவர்களுக்கு
----------------------------------------------------------
ஒப்பீட்டு வாழ்க்கை
முரண்பாட்டுச் சிக்கலுக்கான விடைகள் தேடுகின்ற
பயணங்கள்
கோட்பாடுகளுக்குள் அடங்கப்படாத
வாழ்வியல்
ஆசைகள் இழுத்துச்செல்லும் சூழ்நிலைகள்
இன்னும் பல
நடுத்தர வர்கத்தின் நாட்களின் நகர்வுகள்
யாசகம் செய்யவோ ஆடம்பரமாக வாழவோ விட்டுகொடுக்காத
எட்டிப்பிடிக்காத பொருளாதாரம்
இருட்டிலே ஆரம்பித்து இருட்டிலே
இருப்பிடம் சேரும் உழைப்பு
சுகமாகத்தான் இருக்கிறேன்னு சொல்லி சந்தோஷம்
கேட்டே பழகிப்போல பொழுதுகள்
எல்லாம் தெரிந்த உழைப்பாளிகள் நாளுக்கொரு வேலை
என்ன செய்ய ?
உப்பு மேனிகள்
ஓய்வெடுக்கும் ஈச்சமரத்து ஈர்க்கு நிழல்
வெயில் புகுந்த கணுக்களில்
வியர்வை வழிகிறது
தொப்பாய் நனைந்த ஆடையில்
உப்புத் துகள்கள் ,,,,
ஊருக்கு சொல்லாத சோகம் ,,,
இன்னும் ரெண்டு நாளில்
சம்பளம் போடுவான்
புள்ளைகளுக்கு அனுப்பனும்
சொல்லி நகரும் அவருக்குள் கேள்விக்குவியல்கள்
உப்பின் செரிவை
குறைக்கத்தானோ ஊற்றிக்கொண்டார்
தண்ணீர் கொஞ்சம் ,,
மேனி குளிர்ந்திருக்கும் நாளைமறுநாள் மனது குளிரும்
சம்பளம் அவர்களுக்கு,,
02.
காலநிலை கசிந்த இரண்டாவது பயணம்
-----------------------------------------------
அஃரிணைகள் அறிந்திருக்கும்
பெட்ரோலைத் தெளித்த வாசனையில்
ஆரம்பித்த பயணமது
கைதொடும் இருக்கையில் அவள்
இரண்டு மணிநேரத்துக்கு முன்னர்தான்
தெளிந்த வானம்
மனசு எண்ணிக்கொள்ளும்
உருவங்களாய் மேகங்களை
கிழித்தெறிந்திருந்தது காற்று
மரங்களை ஓட்டுகிறார்,,,
இயற்கையழகை ஒவ்வொன்றாகவும்
கூட்டாகவும் இழுத்துப்போடுகிறார்
சலவைத் தொழிலாளிகள் விவசாயிகள் இன்னும் பலர்
பாவம் ஆற்றில் விழுந்திருப்பார்கள்
மரங்கள் விழுந்திருக்கும்
கண்ணாடி திறந்தால் வேகமாய் ஓடும்
மீண்டும் மூடினால் மெதுவாய் ஓடுவதாய்
ஓர் உணர்வு அவளைப்பார்க்கையில்,,,
புத்தம் புது மழை
நனைய ஆசை என்னைவிட அவளுக்கு
தூவானம் குறைந்த
புழுதி குலைத்த மழை
இதில் காய்ச்சலும் தடுமலும்
கலந்திருக்கும் சொல்லி நகர்ந்தாள்
பயணிக்கிறேன்,,
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-11-25