அலைந்து திரியும் மரணம்
---------------------------------
நடுநிசிப் பொழுதில்
கொல்லைப் புறக் கதவை
திறந்து கொண்டு
பூனை போல
நடந்து சென்று
எட்டிப் பார்த்தேன்
கிணற்றாழத்தில்
நீரின் விட்டத்திற்குள்
பதுங்கியிருந்த நிலவு
சற்று முன்
எரிந்து வீழ்ந்த
நட்சத்திரத்தை ஞாபகப்படுத்தி
எச்சரித்துக் கொண்டிருந்தது
இன்னும்
மினுங்கும் நட்சத்திரங்களை
அ. விஜயபாரதி
bharathi8783@gmail.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-07-07