இருக்கை மனிதர்கள்
--------------------------
பேரூந்தில் பயணம்.
இவர்கள்
ஒரு இருக்கை
சீட்டு வாங்கி
இரு இருக்கையில்
அமரும்
பரந்த மனிதர்கள்.
இருக்கைக்குரியவன்
சீட்டோடு வந்தால்,
அவன் இருக்கையில்
அவனுக்கே பாதி தரும்
நவீன வள்ளல்கள்.
இவர்கள்
நாடுகளின்
ஆக்கிரமிப்பைக் கண்டு
கொதித்தெழும்
மனிதனேயர்கள்.
இருக்கை
ஆக்கிரமிப்புகளை
முறியடிப்பதிலும்,
இருக்கைகளை
கைப்பற்றுவதிலும்
மகா மகா
அலெக்சாண்டர்கள்.
மூவர் இருக்கை...
நடு இருக்கை எனது.
ஒன்றரை ஒன்றரை
இருக்கையில் அமர்ந்திருந்த
அந்த
இரண்டு மாமனிதர்கள்
என் உரிமை இருக்கையில்
கால் பகுதி
கால் பகுதியென,
அரை பகுதியை
விட்டுத்தந்தனர்
மிகப்பெரிய மனதோடு.
இருக்கி நெருக்கி
உட்கார்ந்தேன்,
உருக்கி ஒட்டவைக்கப்பட்ட
இரும்பு சட்டங்கள் நடுவில்
சொருகிய
பஞ்சாக நான்.
ஆம்
உறுதியான
வேண்கலச் சிலைகளாய்
அவர்கள்.
நடுவில்
ஒடுங்கிய
ஈரக் களிமண் சிலையாய்
நான்.
இப்படி அப்படி
நகரமுடியாதபடி
தங்களை தாங்களே
சிலுவையில்
அறைந்துக் கொண்டு
சிலுவையிலேயே
வாழும்
நவீன இயேசு நாதர்களாய்
அவர்கள்.
அடிமைகள்..
சுதந்திரத் தென்றலை
நுகராது வாழும்.
தனக்குத் தானே
அடிமைகளாய் வாழும்.
சுய அடிமைகள்.
-ந.அன்புமொழி
சென்னை.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-09