Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

இறைவாழ்வு.. ஒரு கோப்பை..

- ந.அன்புமொழி

இறைவாழ்வு.. ஒரு கோப்பை தேனீர்..
-----------------------------------------

01.
இறைவாழ்வு
..............

பசித்து பசித்து
வலியால் வதங்கும்
உடல்களுக்கிடையில்,
பசித்து பசித்து
வலித்துச் சுருங்கும்
குடல்களுக்கிடையில்,
முட்டிமோதி
முடிந்த வரை
போராட்டம்.
வலியினை
ஏற்று
இயன்றவரையில்
உயிரினைக் காக்க
தொடர் போரில்
இறைவன்.
தன் மாபெரும்
மனிதப் படைப்பு
மடிந்துவிடக்கூடாதே
என்று..
மொழியாம் மதமாம்
இனமாம் தாய்மண்ணாம்.
இதில் மதச்சிறப்போ ?
இறைவன் வகுத்தளித்த
வழிமுறையாம்.

பல கடவுள்களாம்
பல மதங்களாம்
பல மதவுட்பிரிவுகளாம்.
இவைகளுக்குள்
சண்டைகள்
வன்முறைகள்
படுகொலைகள்.
ஓ
மாண்புமிகு மனிதயினமே..
இறைவனுக்கு நீங்கள்
இன்பத்தைத் தான்
தரவில்லை..
தயவுசெய்து
துன்பத்தைத் தராதீர்கள்.
இறைவன்
மனம் தளர்ந்தால்..
இறைவன்
மனம் தளர்ந்தால்..
பேரிழப்பு.
பேரழுகை.
பேரழிவு.
நிச்சயம்..
நிச்சயம்.
பசிக்கும் வலியின்
உடமையாளர்களுக்கல்ல.



02.
ஒரு கோப்பை தேனீர்
..........................

காலை எழுந்து
கடன்களை முடித்து,
கசக்கியதை கட்டி
குளித்தும் கூழின்றி,
ஒப்பனையில் ஒளிந்து
கல்லூரி கிளம்பினாள்
அவள்.
கரும்பாய்
பேரூந்தில் நுழைந்தவள்
சக்கையாய் வெளிப்பட்டாள்
கல்லூரி வாசலில்.
புதிய தமிழில் ஆய் ஆய்கள்,
விசாரிப்புகளாம்..
பேரூந்தால் தாமதம்
வேகமாய் நடந்தால்
உடன்படிப்பவன்
கல்லூரி வாசலில்,
அதே ஆய் ஆய்.
"என்ன தாமதமா?" அவன்
"சாப்பிட தாமதமாகியது" அவள்.
"ம்.. நீ கொடுத்து வைத்தவள்"
"ஏன்"
"சாப்பிட்டு வருகிறாயே"
இரண்டு வயிறுகளும்
ஏளனமாய் சிரித்தன
இரண்டு முட்டாள்களை நினைத்து.
ஆம் இரண்டுமே பொய்கள்.
"சரி கூட வாயேன் சாப்பிட்டு வரலாம்"
"அய்யய்யோ நான் வரலப்பா.. "
"ப்ளீசு"
"சரி டீ வேண்டும்னா சாப்பிடறேன். "
அதுவும் சொல்லிடறேன்
என்னிடம் பணமில்ல

"அந்த கவல உனக்கெதுக்கு
நீ வந்தால் போதும்,"
"சரி ஒரு நிமிடம் இரு வந்துடறேன்"
கல்லூரிக்குள் ஓடியவன்
கடன் காரனாக திரும்பி வந்தான்.
"வா போகலாம்"
கல்லூரி சினிமா அரசியல் என
தேனீர் கடையில் தேவையில்லா பேச்சுக்கள்.
இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தவள்
மகிழ்வோடு அருந்தினாள்,
கொஞ்சம் கொஞ்சமாய்
பார்த்து பார்த்து
உறிஞ்சி உறிஞ்சி
சுவைத்து சுவைத்து,
ஒரு கோப்பை சிறப்புத் தேனீரை.
மயக்கம் தெளிந்து நிமிர்ந்து அமர்ந்தது
அவளின் பரிதாப வயிறு.
அநிச்சையாய் நடைபெறும்
இவ்வளவு பெரிய நாடகம்
ஒரு
தேனீருக்குத்தானென்பது
இங்கு எந்த (..........க்கு)
இழிவுக்குத் தெரியப்போகிறது
இவளையும் சேர்த்து.
வெறுத்துப் பேசியது
அவளின்
வலிக்கும் வயிறு.


அன்புடன்
ந.அன்புமொழி
சென்னை.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-04-14


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • இறைமகிழ்ச்சி... கடன்
  • உண்மை.. கொலுசொலி
  • இருக்கை மனிதர்கள்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube