எனக்குப் பிறகு மழை!.. வேரீர்ப்பு விசை
01.
எனக்குப் பிறகு மழை!
-------------------------
மழைக்காற்றுக்குப் படபடக்கும்
உலர்ந்த ஆடைகளை
அவதி அவதியாய்
எடுத்து
அலமாரியில் அடுக்குகிறேன்
மழை பெய்து
ஓய்ந்த பிறகு – கொடியில்
வரிசையாய் காய்கின்றன
நிறமற்ற மழைத்துளிகள்
02.
வேரீர்ப்பு விசை
------------------
எவ்வளவு உயரத்தில்
இருந்தாலும்
காற்று வீசுகையில்
தலையசைக்கத் தெரிந்த
இலைகள்
பழுத்துதிர்கையில்
தலை சுற்றியே
வீழுகின்றன
தன் பாதங்களில்
-அ. விஜயபாரதி
-------------------------------------------------------
அறை எண் - 53
முதுநிலை மாணவர் இல்லம்
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
மதுரை – 625 104
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-04-21