Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

பால்ய வயதில் என் நண்பன்

- அ. விஜயபாரதி

பால்ய வயதில் என் நண்பன்
----------------------------------------
இனிப்புகளாலும்
அணைப்புகளாலும்
நிரம்பிய
எதிர்பார்ப்புகளுடன் கூடியது
குழந்தைகளின் உலகம்

இந்த முறை
ஊருக்குச் சென்றபோது
மிட்டாய் வாங்க
மறந்து விட்டதை
சமாதானம் செய்ய
முன்பே பரிச்சயமானதை
அறியாத நான்
தோளில் தூக்கி வைத்து
அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தேன்

தரையில் இறக்கிவிடச் சொல்லி
சற்றே கழுத்தைத் திருப்பி
சிறிது தூரம்
தன்னோடு நிலவை
அழைத்துச் சென்றவன்
ஒரு பட்டத்தைப் போலவே
கண் இமைகளால்
வெட்டி வெட்டி இழுக்கிறான்
பிறகு...
புறப்பட்ட இடத்திற்கே
அழைத்து வந்தான்

இறுதியாய்
வெறுங்கையை அசைத்து
விடைபெற்றுத் திரும்புகையில்
என்னோடு அனுப்பி வைத்தான்
நிலாவையும் சேர்த்து

- அ. விஜயபாரதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-16


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • திசைகளை அசைபோடுதல்
  • விஜயபாரதி கவிதைகள் 25-11-07
  • அதற்குப் பிறகு
  • எல்லோர்க்கும் பெய்யும் மழை
  • நினைவில் விரியும் கிளைகள்
  • எனக்குப் பிறகு.. வேரீர்ப்பு
  • அலைந்து திரியும் மரணம்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube