ஆடலி
------------
கொடிகொடிகொடி
கொடியிடையாளே...
உன் நடனத்தில்
காற்றாகிறது உடல்
கலையாகிறது பிரபஞ்சம்
தாளமும் ஜதியும் சேர்ந்தெழ
சுழல்கிறாய் நீ
சுழலும் பூமியையும் விட
வேகமாயச் சுழலும்
உன்னைச் சுற்றும்
துணைக்கோளாய்...நான்...
கனவின் மயக்கங்களில்
தொலையும் பொழுதில்
பெருகும் சந்தோச நதியின் பிரவாகத்தில்
காற்றாகிறது உடல்
கனலாகிறது மனம்
எது நிஜம்
எது கனவு
என்றறியாத்தவிப்பு
இருளுமின்றி ஒளியுமின்றி
அந்த வெளியில் கலைந்திருந்தது.
ஏதென்றறியா அக்கணப்பொழுதில்
எதையும் உணர முடியா நிலைமீது
அனலாகக் கொதிக்கும் மனதோடு
காத்திருந்தேன்
வெளியேறவும் முடியாமல்
விடை பெறவும் முடியாமல்...
அந்த நாளைப்பரிசாக எடுத்து வந்தேன்.
-வெளிவாசல்பாலன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-09