கவிதைக் கதம்பம்
--------------------
இரயில் சிநேகம்
~~~~~~~~~~~~~
நெடுந்தூரப் பயணம் !
சந்தித்துப் பிரிந்தன
சாலையோர மரங்கள் !!
கோலப் போட்டி
~~~~~~~~~~~~~
நிலவின்
நட்ச்சத்திரப் புள்ளிக் கோலம் !
வரியனின்
வானவில் ரங்கோலி !
இரண்டையும்
பரிசாய்ப் பெற்றது
பூமி !!
உண்மை
~~~~~~~
விரிந்த குடை
விண்ணை மறைக்கலாம் !
விழுந்த மழைநீரில்
தெரியும் வானம் !!
இலையுதிர் காலம்
~~~~~~~~~~~~~~~
பிடிதிருந்தது
என்னவோ புளியங்கொம்பைத்தான் !
ஆனாலும்
விழுந்து விட்டதே
புளிய மரத்து இலை !!
கைப்பிடித்த நாள் முதல்...
~~~~~~~~~~~~~~~~~~~
என்னைக்
கடும் வெயிலில்
காய விட்டதில்லை ...
இடி மழையில்
நனைய விட்டதில்லை ...
என்
கருப்புக் குடை !!
தகிக்கும் வெயில் !
~~~~~~~~~~~~~~~
உருகியது தார்ச்சாலை !
காலணி இல்லாத கால்களுக்காய் !!
கொட்ட கொட்ட
குனிந்தபடி நான் !!
அடடா !
கொட்டும் மழை !
-------------------------
காற்றுப் பந்தலில்
படரும் கொடி
என்னவள் கூந்தல் !!
------------------------
எங்கள் ஊரில்
நால்வழிச் சாலை !
பிரேக் இல்லா
வண்டிகள் திணறியது...
நிறுத்த
மரங்கள் இன்றி !!
-------------------------
காதலியின் துப்பட்டா !
காற்றினில் சிறகுகளாய்...
பறக்கிறேன் நான் !!
------------------------------
கடற்கரை !
கடும் வெயில்...
சுடும் மணல்...
கவலை இல்லை
நாங்கள் காதலர்கள்!!
எனக்குப் பிடிக்கும் !
~~~~~~~~~~~~~~~~
பரிமாற நீ வருவதானால்...
பசி கூட
எனக்குப் பிடிக்கும் !
கனவில் நீ வருவதானால்...
னக்கம் கூட
எனக்குப் பிடிக்கும் !
கற்றுத்தர நீ வருவதானால்...
கைநாட்டாய் இருப்பது கூட
எனக்குப் பிடிக்கும் !
கண்ணீர் விட நீ வருவதானால்...
கல்லறை கூட
எனக்குப் பிடிக்கும் !
-------------------------------
பாண்டூ
ஸ்ரா சக்தி கணபதி டிரேடர்ஸ்
6 ஜவுளிக் கடைத் தெரு
சிவகாசி - 626123
தமிழ்நாடு.
0091-98436-10020
----------------------------------
- பாண்டூ
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-04-03