தமிழ் வாழ்த்து
--------
கத்துங்கடல் ஒத்த முதிர்வினை
முத்துமணி சிந்தும் எழிலினை
பெற்றதொரு செம்மைத் திருமொழி - தமிழ்வாழ்க
குள்ளமுனி கொஞ்சி மகிழ்ந்ததும்
நல்லபல சங்கம் வளர்த்ததும்
சொல்லிலுயா அன்னைத் தவமொழி - தமிழ்வாழ்க
தக்கச்செறி வுற்ற இலக்கணம்
மக்கள்வியந் திட்ட இலக்கியம்
மிக்கதொரு நம்மின் உயிர்மொழி - தமிழ்வாழ்க
சொட்டுஞ்சுவை கல்லைக் கரைத்திடும்
கொட்டும்மழை உள்ளம் நிறைத்திடும்
எட்டுத்திசை எங்கும் விரிந்தநல் - தமிழ்வாழ்க
அங்கமதில் முற்றும் புதுமையும்
சங்கமதில் கண்டச் செழுமையும்
தங்கிவரும் எங்கள் திருமகள் - தமிழ்வாழ்க
செப்பும்மொழி சற்றும் இதற்கொரு
ஒப்புமிலை மற்ற அயல்மொழி
மூப்புமிலா ஒற்றை முதுமொழி - தமிழ்வாழ்க
அன்றுமுதல் இன்று வரையிலும்
என்றுமுள இன்பக் கனிமொழி
கன்னித்தமிழ் என்று விளங்கிடும் - தமிழ்வாழ்க
பள்ளிதனில் கல்வி பயில்வதும்
உள்ளதொரு எந்த அலுவலும்
தௌ¢¢ளுதமிழ் தன்னில் கொணா¢ந்திட - தமிழோங்கும்!
-- பாண்டூ ...
சிவகாசி.
rrameshpandi2001@yahoo.com
+91 98436-10020
- பாண்டூ
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-11-16