சுனாமிக்கு ஓர் அஞ்சலி
---------------------------------
கணபதியே! கணபதியே! கணத்த கணபதியே!
கடலிலே கரைச்சதாலே கடலும் பொங்கியதோ !!
பொங்கலும் வருகுதுனு மார்கழி முடியுதுனு!
பொங்கலோ பொங்கலென கடலும் பொங்கியதோ!!
மழையா நீயழுதா மகிழ்ச்சி ஊருக்கெல்லாம்!
அலையா நீசிரிச்ச அழுதோம் நாங்களெல்லாம்!!
மூழ்கிய பேருக்கெல்லாம் முத்த நீகொடுத்த!
முத்தான சொந்தங்கள ஏன் நீ மூழ்கடிச்ச!!
கடும்விஷம் உனக்குளுண்டு கதையில் கேட்டதுண்டு!
கக்கிய நஞ்சையின்று குடிக்க ஈசன்வல்ல!!
உப்பாய் கரிச்சாலும் உறவுடன் கலந்திருந்தோம்!
உப்பாய் எங்களது உயிரையும் கரைத்தாயே!!
அஸ்தி கரைக்கவே ஆழ்கடலே வந்திருந்தோம்!
ஆளையே கரைத்தயே யாரிடம் போய்ச்சொல்வோம்!!
உணவுக்கு கடலம்மா உன்னைத்தான் நம்பியிருந்தோம்!
உணவாய் எங்களையே உண்டதும் ஏன்தானோ!!
கடலம்மா உன்மடியில் கரையில் கிடந்தோமே!
கரைசேர்ப்பாய் என்றே கனவுகள் சுமந்தோமே!!
இரைச்சலோடு வந்தே இரையாக்கிப் போனாயே!
உரிமையோடு வந்தே உணவாக்கிப் போனாயே!!
சூரியோதயம் பார்க்கவே வழ்ந்துதான் இருந்தோமே!
அஸ்தமனம் ஆக்கியே ஆகாதவனாய்ப் போனாயே!!
மூழ்கிய சூரியனும் முழுதாய் காலைவரும்!
மூழ்கிய வாழ்க்கையையும் மனிதம் மீட்டுத்தரும்!!
-------------------------------------
பாண்டூ
ஸ்ரா சக்தி கணபதி டிரேடர்ஸ்
6 ஜவுளிக் கடைத் தெரு
சிவகாசி - 626 123
தமிழ் நாடு.
செல்லிட பேசி : 98421-42192
--------------------------------------
- பாண்டூ
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-03-27