ஓசைகளின் பின்னால்
முகம் ஒளித்த
பறவைகளின் ஒலிக்கலவை
செவி தீண்டும்!
'கலவை' இல்லை 'இசைமை' என்று மனம் கூறும்
ஓசைகடந்த ஓங்காரம்
உறைக்காது மரத்த புலன்
இதை விடவும் வார்த்தை தேடி
இம்சையுறும்!
சொற்கள் சிறையமைக்க
மெளனம் விடைபெறும்!
ஓசை குழப்பமாய்க் குடிகொள்ளும்.
-சிதம்பரம் நித்யபாரதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-18