Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

வெளிநாட்டுச் செய்திகள்

- றஹீமா-கல்முனை

வெளிநாட்டுச் செய்திகள்....!!!
------------------------------------

வறுமையும்
இந்த கிடுகு குடிசையும் தான்
மத்திய கிழக்கு மண்ணை
நோக்கி
என்னை
தூர நகர்த்திட்று....
தோளில் பயணப்பொதிகளின்
சுமைகளோடும்....
மனசு பூராவும்
எம்மாத்திரம்
ரணங்களோடும்
போய்வருவதாய் சொல்லி
விடைபெறுகிறேன்.....
அப்போதைக்கு
யாரும் என்னை
தடுத்து நிறுத்தவேயில்லை!!!
குழந்தைகள்
குதூகலிப்பிழந்து....
கண்களைகசக்க
வீட்டு மூலையில் இருந்து
உம்மாவின்
முணகல் சத்தம்!!!

"அவர் "
தலைகவிழ்ந்தபடி
பேசாமல் நிற்க
நான் விடைபெற்றேன்!!!
மத்திய கிழக்கு மண்ணை நோக்கி
என் விலாசம் நகர்த்தி....
பணிப்பெண்ணாய்
இப்போதைக்கு நான்
சொல்லமுடியாத
துயரங்களுக்கு நடுவிலும்
புழுவாய் நெளிந்து.....
ஊறிப்பொழிந்த
வியர்வைகளை
பத்திரப்படுத்தி பணமாக்கி
என் விலாசம் நோக்கி
நகர்த்தி
சில வருடங்களின்
தொலைவில்
"அவருக்குப்பிடிக்கும்"
குழந்தைகளுக்குப்பிடிக்கும்
என
வாங்கிக்குவித்ததை எல்லாம்
தோள்களில் சுமந்தபடி..
மறுபடியும்
என்
பிறந்த மண்ணில்
வந்து வீழ்கிறேன்!!!!
எம்மாத்திரம் சந்தோசம்
எம்மாத்திரம் கனவு....
ஊரே மாறிப்போயிருந்தது;
கிடுகு வேலிகள் தொலைந்து
மதில்களில் ஒரு
கம்பீரம் தெரிந்தது.....
அரைகுறையாய் கிடந்த
வீடுகள் எல்லாம்
நாகரீகத்துக்குள்
பக்குவப்பட்டிருந்தன.....!!!
விரைவைக்கூட்டி நடக்கிறேன்
வீடு வந்தது....

முற்றத்திலேயே
முறிந்து விழுந்தது
என் - முகம் !!!!!!!!!!!!!
போகும் போதிருந்ததை விடவும்
பொத்தல் விழுந்து
இத்து இறந்து போய்
என் - குடில் !!!
வயசுக்கு வந்த மகளோடு....
வயதான
என் - உம்மா
விஷயம் அறியாமல்
தேடிப்போனபோது
"அவர் "
நின்றிருந்தார் !!!
போகும்போது நின்றிருந்தாரே
தலைகவிழ்ந்தபடி ......
அப்படியேதான்
இப்போதும் நின்றிருந்தார்
அடுத்த தெருவில் இருக்கும்
இன்னொருத்தியின்
முற்றத்தில்...!!!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-11-02


ஷிப்லி

17 years ago

றஹீமாவின் கவிதைகள் பல்கலைக்கழக நாட்களில் என்னை அதிகம் பாதித்தவை..

இரண்து மூன்று கவிதைகள்தான் அப்டீபாது படிக்கக்கிடைத்தது..இப்போது நிறையப்படிக்க வாய்ப்பை ஏற்படத்தியுள்ள அவரது கணவருக்கும் நன்றிகள்

சுனாமியில் மரணித்த முபீனாவுக்காக றஹிமா எழுதிய கவிதை எனது இரவகளை கண்ணீராக்கிய நாட்களை எங்கனம் மறப்பத?

----
சுனாமி குறித்த கவிதைகளில்

'மெயினில் இருந்தவர்கள்தான் முதலில் ஓடினார்களாம்' என்ற வரிகளின் நிதர்சனம் எல்லா கவிஞர்களுக்ககும் வராது..

வாழ்த்துக்கள்

றஹிமாவுக்கும் அவரது கணவருக்கும்

raheema faizal

16 years 2 months ago

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஷிப்லி.

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • சோதனைச் சாவடி
  • கண்கெட்டபிறகு
  • வழியனுப்புதல்
  • மௌனம்
  • விடை பெறுதல்
  • திருமதி . தொலைக்காட்சி

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube