Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

விடை பெறுதல்

- றஹீமா-கல்முனை

விடை பெறுதல்...
---------------------------

நமது பயணங்கள்
உடைவுகளோடு.....
இப்படியே முடிந்துவிடுகிறது..!

துண்டு..துண்டாய்
எத்தனை சினேகிதிகள்!!

பல்கலைகழக
கன்ரீன் முற்றத்து
வாசகங்கள்
இன்னும் நினைவிலுண்டு....
நாம் நாமாக
நமக்காக இருந்தோம்....

அடர்ந்த பற்றைகளோடு
அழுக்கேறிய கற்களோடும்
அந்த மரத்தடியை
நாம் ஐவருமே
அழகாக்கினோம்

பரீட்சை
முடிந்தகையோடு
அவசரமாய் விடைபெற்றோம்
ஆற்றமுடியாத அழுகையோடு...

புகைப்படங்களும்
ஆடோக்ராப்களுமாய்
கடைசிநாளின் கலவரம்
இன்னும் நினைவிலுண்டு..

நீண்ட
இடைவெளிகளின் பின்னரான

தொலைபேசியின்
அறுவைகள்
எஸ்.எம்.எஸ். ஆய்
உருமாறிக்கடைசியில்
காணாமல்போயிற்று...

வருகிற
திருமண அழைபிதழளுக்கு
'ஸாரி'
சொல்லி வாழ்க்கை ...
அலைகிறது

குழந்தையின்
அழுகையை நம்
புகைப்படங்கள்
நிறுத்திக்கொண்டிருக்கிறதாம்
நிஜமா????

நம் சந்திப்புகள்
எதிர்பாராமல்
எப்போதாவது நடந்துவிடுகிறது....
ஒரு அதிசயம்போல

குழந்தைகளோடு...
பொறுப்புள்ள உம்மாவாய்
ருமைசாவும்..!

படிப்போடு
பிடிவாதமாய் இருக்கும்
அக்மலும்.....

கணவரின்
மார்க்கக்கடமையில்
கருத்தாய்...
சிஹானா!!!

அவசர அவசரமாய்
திருமணமாகி.....
காணமல்போன
ஸீனத்...

நாங்கள்
கடைசிநாளிலேயே
தொலைந்துவிட்டோம்...!!!

இப்போதெல்லாம்
நாங்கள்
புகைப்படங்களில்
மட்டுமே
ஒன்றாயிருக்கிறோம்...!!!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-06-22


saabras

16 years 5 months ago

ரஹீமா, ஒவ்வொரு முறையும் வார்ப்புக்குள் நுழையும்போது உங்களது கவிதைகளை படிக்க்க தவறுவதில்லைrnஅந்தளவுக்கு உங்களது கவிதைகள் அனைத்தும் வாழ்வின் நிஜங்களை யதார்த்தங்களை அப்படியே பேச்சு மொழியில் நேர்த்தியாக சொல்கிறதுrnநீங்கள் மேலும் மேலும் கவிதைகளை எழுத வேண்டும் .உங்களது கவிதைகள் வெளியாகும் கால இடைவெளி அதிகமாக இருக்கிறது அதை குறைத்துrnஅதிகமான கவிதைகளை வாசகர்களுக்கு வழங்குங்கள் .

saabras

16 years 5 months ago

ரஹீமா, ஒவ்வொரு முறையும் வார்ப்புக்குள் நுழையும்போது உங்களது கவிதைகளை படிக்க்க தவறுவதில்லைrnஅந்தளவுக்கு உங்களது கவிதைகள் அனைத்தும் வாழ்வின் நிஜங்களை யதார்த்தங்களை அப்படியே பேச்சு மொழியில் நேர்த்தியாக சொல்கிறதுrnநீங்கள் மேலும் மேலும் கவிதைகளை எழுத வேண்டும் .உங்களது கவிதைகள் வெளியாகும் கால இடைவெளி அதிகமாக இருக்கிறது அதை குறைத்துrnஅதிகமான கவிதைகளை வாசகர்களுக்கு வழங்குங்கள் .

raheema faizal

16 years 2 months ago

கருத்துக்கும் ,ஆலோசனைகளுக்கும் நன்றி

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • சோதனைச் சாவடி
  • கண்கெட்டபிறகு
  • வழியனுப்புதல்
  • வெளிநாட்டுச் செய்திகள்
  • மௌனம்
  • திருமதி . தொலைக்காட்சி

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube