சோதனைச் சாவடி
-------------------------
தெருவுக்குத் தெரு...
வாந்தி எடுதபடி
நகர்கிறது பஸ்.
கேட்டால் சொல்கிறார்கள்:
சோதனைச் சாவடியாம்!!
ஏத்தி இறக்கி...
கையில் இருந்த
பொதிகளை எல்லாம்..
பிரித்து மேய்ந்து
ஆள் அடையாள அட்டையில்
பழைய முகம்....!
புதிய முகம் தேடி
ஆயிரம் முறை
அடையாள அட்டை
புரட்டி
பாதி சந்தேகத்தில்
வழியனுப்பிவிடும்
காக்கிச்சட்டைக்காரன்....!!
கண்ட கண்ட
இடங்களில் எல்லாம்..
இழுபட்டு தொடரும்
மண்ணாங்கட்டிப்
பயணங்கள்
இப்போதெல்லாம்
colombo பயணங்கள்
துணியாதொங்களிலாம்!!!!
முறைப்படுகிறார்கள்
பயணிகள்
சோதனைச் சாவடிகள்
நிறைந்த.......
பயணங்கள் இல்லாமல்
தொடரட்டும்.....
நமது
வாழ்கைப்பயணங்கள்!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-05-01
உங்கள் சோதனைச்சாவடிகள் வாசித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. சாவடிகள் என்ற பெயரில் சாவடிக்கும் கொடுமையை உணர்வு ரீதியாக அருமையாக வெளிப்படுத்தியிருந்தீர்கள்.
உங்கள் கவிதைகளில் நான் வழமையாகவே ரசிக்கும் விடயமே அந்த பேச்சு வழக்குத்தான்.
"கண்ட கண்ட
இடங்களில் எல்லாம்..
இழுபட்டு தொடரும்
மண்ணாங்கட்டிப்
பயணங்கள்"
என்ற வரிகள் எனக்கு நீங்கள் எழுதிய "உதவாக்கரை பஸ்கால் procedures" யினை ஞாபகம் செய்கிறது.
தொடர்ந்தும் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில்.....
முற்றிடுகிறேன்.
நான் கல்முனையான் என்ற பெயரில் இணையத்தில் மாத்திரம் கவி எழுதுபவன்.
முடிந்தவரை எழுதுங்கள் அத்துடன் நம் ஊரின் புழுதி கலந்த புலமைப் பேச்சுக்களையும் சேர்த்து
எழுதுங்கள்
நன்றி