தட்டுப்பாடாய்… வராது… சிந்தவைத்தது…முடிசூட…
01.
தட்டுப்பாடாய்…
----------------------
ஜனநாயகச் சந்தையில்
வந்திருக்குது
வகைவகையாச் சரக்குகள்,
வந்ததிலே
விலை மலிவாய்
வீதியெல்லாம் கிடக்குது
ஊழல்,
உண்மையில் தட்டுப்பாடு-
உண்மைதான்…!
02.
வராது…
----------
மந்திரி வீட்டில்
மாடு செத்தால்கூட
ஓடி வருவர்
ஓராயிரம் பேர்,
மாறினால் ஆட்சி-
அந்த
மந்திரி செத்தாலும்
அவன்
மாடு கூட வருவதில்லை
தேடி!
03.
சிந்தவைத்தது…
-------------------
மந்தரையிடம்
மன்னன் ராமன் ஆடிய
சின்ன விளையாட்டு
அவனை
சிந்தவைத்தது கண்ணீர் -
சீதையைப் பிரிந்தே..
சுந்தர ராமன்மீது
சூர்ப்பனகை கொண்ட
சேராத காதல்
இராவணனை
சிந்தவைத்தது செங்குருதி –
சீதையை நினைத்தே…!
04.
முடிசூட…
------------
காம சாம்ராஜ்யத்தில்
கட்டில் சிம்மாசனத்தில்
இரகசியமாய் அரங்கேறும்
தற்காலிக
முடிசூட்டு வைபவம்தான்-
விபச்சாரம்…!
-செண்பக ஜெகதீசன்…
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-18
----------
மந்திரி வீட்டில்
மாடு செத்தால்கூட
ஓடி வருவர்
ஓராயிரம் பேர்,
மாறினால் ஆட்சி-
அந்த
மந்திரி செத்தாலும்
அவன்
மாடு கூட வருவதில்லை
தேடி!
மாடு என்பது 'செல்வம்' என்ற பொருளில் உருவகப்படுத்தியிருப்பது அருமை.
மந்திரி என்றாலும் கூட செத்துப்போனபின் செல்வம் கூட வராது என்கிறார் கவிஞர்.
அன்புடன்
மு.குருமூர்த்தி