செல்லரிக்கச் செய்வோம்
அவசர யுகத்தில் அன்புகூட
தவணைமுறையில் பரிமாறப்படுகிறது
கணவன்-மனைவி வசிப்பது ஓரேவீட்டில்
இருவரும் சந்தித்து வாரம் கடந்திருக்கும்
குறுஞ்செய்தி வழியாக ஊஞ்சலாடிக்
கொண்டிருக்கிறது - அன்பு
தொலைத்தொடர்பு கோபுரங்களின்
உச்சியில்
திருமண அழைப்பிதழ்
கடன்பற்று அட்டை அல்ல
நினைத்ததும் வங்கிபெயரை
மாற்றிகொள்ள
மந்திரங்கள் ஓத மேளதாளம் முழங்க
உற்றார்களின் நடுவில் நிச்சயிக்கப்படும்
பந்தம்
மரக்கூண்டுகளின் நடுவே
சுத்தியல் ஓசை முழங்க அறுக்கப்படுகிறது
புரிந்துணர்வும் விட்டுக்கொடுத்தலும்
மனிதப்பண்புகள்
மனிதர்களாக பிறந்தோம்
மனிதர்களாக வாழப்பழகுவோம்
விவாகரத்து வழக்குகளை
செல்லரிக்கச் செய்வோம்
- லலிதாசுந்தர்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-18
அன்புடன் உமா