விழித்துக்கொள்வோம்
இடிந்து கொண்டிருக்கும் சுவற்றில்
சித்திரம் வரைந்து
கொண்டிருக்கிறோம்
சித்திரத்தின் முழுமையை
உணரமுடியாபாதையில்
செவிகளை விற்று
இசைகருவி வாங்கிக்
கொண்டிருக்கிறோம்
அபாயம் அறியா
விளக்கை சுற்றும் விட்டில்ப்பூச்சிகளாய்
மின்னனுகருவிகளின் பிடியில் மயங்கி
கொண்டிருக்கிறோம்
தொலைத்தது பணமெனில்
மீட்டுவிடலாம்
தொலைந்துக் கொண்டிருப்பது
வாழ்க்கை
விழித்துக்கொள்வோம்
முற்றிலும் இயந்திரமனிதனாய்
மாறும்முன்
- லலிதாசுந்தர்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-10-08