இரவின் மடியில்
இரவோ
கருமையை காற்றில்
உமிழ்ந்தபடி..
மனமோ
வெறுமையை உள்வாங்கி
தனிமையை அசை போட்டபடி
அரைத்தூக்கத்தில்..
முழுமையை தூங்கிவிடவும் முடியாமல்
துயில்களைந்து எழுந்துவிடவும் இயலாமல்
அப்படியே இரவின் மடியில்
யுகங்கள் கோடி கிடப்பேனா!
அல்லது அழ்மனதில் ரீங்காரமிடும்
வெருமையின் இசை கேட்டு
விழிப்பேனா!
-- வீ.கார்த்திகேயன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-23