பரண் மேல் பழைய நினைவுகள்
பரண் மேல்
பழைய நினைவுகள்
பூட்டப்பட்ட ஒரு பெட்டி...
பிறந்த நாள் அன்பளிப்பு
பெற்றோரிடமிருந்து மறைத்து வைத்த
பரிட்சைத்தாள்
தபால் பெட்டி வரை செல்ல
தகுதி இல்லாமல்
பெட்டிக்குள் தூங்கிப்போன கடிதங்கள்
எல்லாம் விழித்துக் கொண்டு
எந்தன் துயில் கெடுக்கும்
தீபாவளிக்கோ
பொங்கலுக்கோ
வீட்டை தூசி தட்டுகையில்
-- வீ.கார்த்திகேயன்
மயிலிறகு
மயிலிறகு குட்டி போடுமென்று
மறைத்து வைத்தேன்
நோட்டு புத்தகத்தில்...
மறந்து போனேன்
வருடங்கள் உருண்டன
தூசி தட்டி பிரித்தபோது
குட்டி போட்டிருந்தது
மயிலிறகல்ல
மறக்க முடியாத என் நினைவுகள்
-- வீ.கார்த்திகேயன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-13