சில ஹைக்கூ கவிதைகள்
கரு வானம்
வெளியே தனியே
ஒரு மிதக்கும் இலை
-------------------------
பள்ளி முடிவு-
தனியேவொரு பல்லி
கரும்பலகையருகில்
--------------------------
முதியோர் இல்ல மாலை-
எனது முதல் கடிதம்
தந்தையின் டைரியில்
-------------------
நீண்ட நாள்-
நிழல்கள் ஊர்கின்றன
நத்தை வேகத்தில்
------------------
சூர்யோதயம்-
தாமரையிலை மஞ்சமென
ஒரு பாதரசத்துளி-
--------------------
சிறு தூறல்-
பால்கனி கைப்பிடியில்
முத்து வரிசை
-----------------------------
திடீர் தூறல்-
ட்ரம் இணையும்
ஓட்டுனரின் பாடலுடன்
----------------------
----------------------
நெடுஞ்சாலை-
முன் செல்லும் கார் தூக்கிச்செல்லுகிறது
மதிய சூரியனை
-----------------------
விடியல்-
அவனுடன் எழுகிறது
ஒரு வண்ணத்துப்பூச்சி
-----------------
by A.Thiagarajan-
Originally published by the author in English in Haiku Harvest Vol. 6, No. 1 - Spring & Summer 2006; and later compiled in the book Haiku Harvest 2000-2006 -Compiled and edited by Denis M. Garrison.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-16