புரிவதில்லை கவிதை
உன்னுடைய
இந்த கவிதைக்கு
என்ன அர்த்தம்
ஒன்றும் புரியவில்லைஸ
ஆச்பிரின்,
கடித்துப் பாதியாகக்
கிடக்கும்
ஒரு ஆப்பிள் துண்டு
காபியோ
அல்லது டீயோ
ஏதோ ஒன்றின்
ஒரு காய்ந்து போன கோப்பை-
ஒரு இளம் பெண்
அரைகுறை ஆடையில்
ஒரு மூலையில்
சிவலிங்கம் சாய்ந்து கிடக்கிறது-
நாற்காலி மீது
ஜென் புத்தகம் பாதி
திறந்த நிலையில்-
தண்ணீர் கொட்டி
அது கோடிட்டாற் போல
இது போன்ற சில வார்த்தைகள்
வேறொன்றும்
இல்லை-
கேட்டால்-
புரியாது
உனக்கு என்கிறாய்
அது சரி
இது ஒரு
ஓவியமல்லவா
எனக்கு
கவிதை
புரிவதில்லை தான்
- A. தியாகராஜன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-04-06