தமிழிருக்கச் செய்வோம்!
கரு.திருவரசு
எவருக்கும் எல்லாமே இரண்டிரண்டாய் இங்கே
இருந்திடலாம்! செல்வரெனச் சிறந்திடலாம்! ஆனால்
எவருக்கும் இருதாயார் இருப்பதில்லை! உன்னை
ஈன்றெடுத்த தாய்த்தெய்வம் என்றென்றும் ஒன்றே!
எவருக்கும் தாய்மொழியாய் இருப்பதொரு மொழியே!
இன்தமிழே உனக்குத்தாய் மொழியாகும்! இதிலே
எவருக்கும் இருகருத்தே இருக்க முடியாது!
இருந்தாலோ அவனைவிடு, திருத்த முடியாது!
பிள்ளைக்குச் செந்தமிழில் பெயரிடுவோம் என்றே
பேசுவதும் அதற்கொருநூல் போடுவதும் என்ற
எல்லைக்கு நம்தமிழன் எப்படித்தான் போனான்?
இருந்தாலும் மறந்திடுவோம்! இனியேனும் செய்வோம்!
பிள்ளைக்கு நம்தமிழில் பெயரிடுவோம்! இதிலே
பேதமுறும் ஒருமகனைத் தமிழச்சி பெற்ற
பிள்ளையவன் இல்லையெனத் தள்ளிடுவோம்! இனத்தின்
பெயரிருக்க வேண்டுமெனின் தமிழிருக்கச் செய்வோம்!
"வெல்லத் தமிழினி வெல்லும்"
thiru36@streamyx.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-01-15