Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

தெய்வமனம் அமைந்திடுமோ!

- கரு. திருவரசு

தெய்வமனம் அமைந்திடுமோ!

~ கரு. திருவரசு ~

பார்வையிலோர் ஓவியமும் பவளவிதழ் சிரிக்கின்ற
பான்மையிலோர் காவியமும் பதுமையென இருக்கின்ற
சீர்மையிலோர் சிற்பமதும் செய்திடுவேன் அவையெல்லாம்
சிந்திடுமோ மழலைமொழி சிறுகுழந்தாய் உனைப்போலே


தடுமாறும் நடைகண்டு தரமான நாட்டியமும்
தடதடெனத் தளிர்க்கைகள் தட்டுவதில் தாளங்களும்
திடுமெனநீ அழும்போது தேனிசையும் கற்றிடலாம்
சிறுதுயிலில் நின்முகப்பூ செய்நடிப்புத் திறம்வருமோ!


சிந்தியமு துண்பதிலே சிறப்பீகைப் பெருங்குணமும்
தந்தைக்கும் சடைநாய்க்கும் தரும்முத்தச் சமத்துவமும்
உந்தியுந்தி முயல்வதிலே ஊக்கத்தின் உயர்வடிவும்
உணர்ந்திடலாம்! உலகிலினி உன்பருவம் கிடைத்திடுமோ!


கரித்துண்டால் கீறுவதில் கன்னியர்செய் கோலங்களும்
பிரித்துவைத்து நூல்படிக்கும் பேரழகில் இலக்கியமும்
சிரித்தழுது விழுந்தெழுந்து திரிவதிலே செயல்திறமும்
தேர்ந்தாலு முனக்கிருக்கும் தெய்வமனம் அமைந்திடுமோ
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-11-19


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • தமிழிருக்கச் செய்வோம்!

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube