மொழி வாழ்த்து
கவி ஆக்கம்: சின்னபாரதி
தாயின் தனிமொழி வாழி
தாழ்ந்தவர் உயர்ந்திட வாழி
இல்லறம் போற்றி வாழி
இவ்வுலகம் போற்றி வாழி
குழவியிதழ் தேனாய் வாழி
கொண்டவர் உயர வாழி
நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழி
நிகரில்லா நிலையாய் வாழி
கற்றவர் போற்ற வாழி
கயவர் தம்மை மாற்ற வாழி
எண்ணாலும் எமுத்தாலும் வாழி
சொல்லாலும் செயாலாலும் வாழி
கவிதையும் கதையுமாய் வாழி
காவியமும் காப்பியமுமாய் வாழி
செம்மொழியிலும் சிறப்பாய் வாழி
எச் செவிக்கும் தேனாய் வாழி
இதயமதை இல்லமாக்கி வாழி
இன்முகங்காட்டி பேச்சு மொழியாய் வாழி
கரும்பலகை தாண்டி வாழி
கனினியுகம் தாண்டி வாழி
கலப்பு களைந்து வாழி
கன்னித் தமிழாய் வாழி
கவி ஆக்கம்: சின்னபாரதி
006591029762
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-01-15