பயனில்லை
இது என் கவிதையில்லை-
இதனுள் என்னை அடையாளம் காணவேண்டி
படிப்பதில் பயனில்லை-
வாய் எது
பேசுமுகமெது
என்றறியா
இருதலை மிருகம் போலவே
இதுவும்-
எனக்குத் தெரியாது
எனவே நான் உள்ளேன்-
எனக்குத் தெரிந்திருந்தால்
நான்இங்கில்லை,
இப்போது உங்களுடன்-
ஆக
நான் சொல்லுவது
நீங்கள் கொடுத்ததுவே
யாரோ சொன்னது போல
(ஏன் ஒரு பெண்ணிடம்?
ஏவாள் இல்லையேல்
இரண்டாவது இல்லை என்பதாலா?
ஏன் முதலும் கூடத்தானில்லை-
நான் உண்டென்று சொல்ல
நீ அவசியம் தானே
ஆக
நான் சொல்லுவது
நீங்கள் கொடுத்ததுவே
இதில் ஏதாவது
நீங்கள் தராதது இருக்கிறதா-
அப்பாவாகவோ, அம்மாவாகவோ
நண்பனாகவோ, ஆசிரியராகவோ,
எதுவாகவோ-
எனக்குத் தெரியாது
எனவே நான் சொல்லமுடியாது..
ஆக
இதைப் படிக்கவேண்டாம்
இது என் கவிதை அல்ல-
- A. தியாகராஜன்.
-------------------------------
A.Thiagarajan
A-504 Dosti Aster
Wadala East
Mumbai 400 037
(thiag@vsnl.com)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-12-05