பூவையின் எண்ணங்கள் ....
சக்தி சக்திதாசன்
பொறித்து விட்டேன் மனதில்
பொன்மகள் பெயரை
போகாதம்மா நெஞ்சை விட்டு
பூங்கொடி உன் நினைவுகள்
காற்றாக வந்தாயோ என்
கவிதையில் கலந்தாயோ
நேற்றாக இருந்தாயே
நினைவாக நிறைந்தாயோ
மாற்றாத கோலத்தில்
மங்கையுன் புன்னகை
மணிக்கணக்கில் பேசினாலும்
முடியாத பேச்சுக்கள்
தோன்றாது புவியிலிது போல
தோற்காத காதல்
தோகைமயிலே ஒன்றுசொல்வேன்
துணை இனியெனக்கு நீதானே
அன்புடன்
சக்தி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-06-14