அந்தக் கணம் ....
நிசப்தமான பொழுதினிலே
நீலக்கடலின் மத்தியிலே
நிம்மதியான கணமொன்று
நினவில் தடம் பதித்ததுவே
அடிக்கும் அலைகள்
அனைத்துமே
அமைதியாக கரையைத் தழுவி
அந்திப்பொழிதின்
சாரத்திலே
ஆசைமுத்தம் பொழிந்தனவே
நேற்று எந்தன் உள்ளத்திலே
நெருடிய நினைவின்
உறுத்தல்கள்
நீங்கின அந்த வெள்ளத்திலே
நிர்மலமான ஆழியின்
ஆழத்திலே
ரீங்காரமிடும் அலைகளின்
ஓசையில்
நயமாகப் பிறந்திடும்
மயக்கும்
இசையினில்
நெஞ்சத்தின் ஊஞ்சலை
ஆட்டும் கீர்த்தனம்
நிகழ்த்திய அற்புதம்
நிகழ்ந்தது
ஒரு கணம்
மாலநேரத்து வெய்யிலின்
மஞ்சள்
மயக்கும் கடலின் அதிசய
அமைதி
மணக்கும் மகிழ்ச்சியின்
தொடக்க
நிகழ்ச்சி
அந்தக் கணம் .....
என்னையே நான்
மறந்த கணம் .....
கடற்கரையோரத்து வெண்மணல்
கலகலப்பாய் ஆடும்
கள்ளமற்ற குழந்தைகள்
களிப்பு
கணநேரம் நான் என்னையே
இழப்பு
என்னுள்ளத்தை உசுப்பிய
கணங்களைச் சேர்த்து
எண்ணத்து நாரினில்
மாலை தொடுத்து
ஏற்றமுடைத்த இயற்கையன்னை
பாதங்களில் நான்
படைத்தேன் காணிக்கை
சக்தி சக்திதாசன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-06-05