சித்திரமே சிதைத்தாயோ ?
--சக்தி சக்திதாசன்
நினைவுகளைக் கிளறிப்
பார்க்கின்றேன்
நெருடல்கள் கொஞ்சம்
நெருஞ்சி முற்களைப் போலே
கனவுகளைக் களைந்து
பார்க்கின்றேன்
கலங்கல்கள் சில
குழம்பிய குட்டை போலே
புனைவுகளில் புதையுண்டு
பார்க்கின்றேன்
வடிப்பவை எல்லாம்
வாடிப்போன மலர்களாய்
முனைவுகளைச் சிந்தித்துப்
பார்க்கின்றேன்
முடியாதவைகள் எதையுமே
முடித்ததாய் இல்லை
நனவுகளில் நீந்தும்போது
பார்க்கின்றேன்
நினைவுகளால் விளைந்த
கனவுகளைச் சிதைத்த
சித்திரமே நீதானென்று ....
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-04-17