புதுவருடத்தை நோக்கி
--சக்தி சக்திதாசன்
புத்தம் புதியதோர்
புதுவருடத்தை நோக்கி
புதியாய் மேற்கொள்ளும்
புதுப்புனல் போன்றதோர்
பயணம்
சித்திரைத் திருமகள்
இத்தரை மீது போர்த்தும்
புற்தரை போன்றதோர்
பொற்திரைக் கம்பளம்
நிஜங்களைத் தேடி
நிழல்களை மிதித்து
நீயும் நானும் தேடிய
நிலையற்ற முடிவுகள்
கடந்து போகட்டும்
கரைந்து மறையட்டும்
கனிந்து வருவது புதிய
கச்சிதமான வருடம்
சூறாவளியாக தென்றல்
சூறையாடிய கடற்கோள்
வனியமான வாழ்க்கை
சுடராகிப் போகட்டும்
புரட்சிக் கவி பாரதி
புனைந்த கவிதைகளை
புதிய வேதமாய்க் கொண்ட
புனர்ஜென்ங்கள் மலரட்டும்
தமிழின் தனயர் கண்டேன்
தழைத்து எழுகின்ற நிகழ்வு
தரணியில் எனக்கு என்றும்
தருவது இன்பம் தானே
புதுவருடத்தை நோக்கி
புலரும் பொழுதினிலே
பொங்கும் உள்ளத்துடன்
போகின்றேன் பயணமே
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-04-17