காதல்
- மு.கந்தசாமி நாகராஜன்
மறப்பது...
நினைப்பது...
மறக்க நினைப்பது...
நினைக்க மறப்பது..
ஒரு
குழப்பமான
கவிதை தான்
காதல்
வந்த காதலால்
வருகின்ற நல்வினையை
வெல்லத்தான் இயலுமோ
புல்லர்தம்
உலகினிலே...?
தீராத
துன்பமென்றும்
தெவிட்டாத
இன்பமென்றும்
போற்றினாலும்
தூற்றினாலும்
அறிந்தவர் யார்
அவனியிலே
உண்மைக் காதல்
என்னவென்று...?
வருடும் போது
அழுகை தரும்
வலிக்கும் போது
சிரிப்பைத் தரும்
விந்தையான
வியாதி
இதன் பெயரென்னவோ?
காதல்தானே...?
வெல்லும் வரை
துடித்த மனது
வென்ற பின்னர்
மருளுவதேன்?
பாவை உந்தன்
பாதம் தொட
பாதையாக மாறிடவா?
தென்றலாக மாறி
தேவி உந்தன்
கூந்தலினை வருடிடவா?
மாலை
நிலை கொள்ள
மருளும் நெஞ்சத்தைத்
தருகின்ற
காதல்...
கேலிக் கூத்தாகிக்
கொடியவரின்
இரவுக்குப்
பெயராகிப்
போனதென்ன..?
மயில் மகளே...
உனை
மாலை சூட
குயில் போலக்
கூவி அழைக்கிறேன்
நெஞ்சத்தில்
மஞ்சம் கொள்ள
நீ
வஞ்சமின்றி
வந்து விடு
அழைப்பது காதலா?
இதயத்தைத்
தொலைப்பது காதலா?
தொலைந்து போன
இதயத்தைத்
தொலைவிலிருந்தும்
அழைப்பதே
காதல்!
காதல்
காதல்
காதல்
காதல் போயிற்
சாதல்
சாதல்
சாதல்
பாரதி
மொழிகளே வேதம்
படைப்போம்
புதியதோர்
காதல் கீதம்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-04-17