சித்திரைப் பெண்
-மு.கந்தசாமி நாகராஜன்
சித்திரையில்
பிறந்த
சித்திரப்பெண்
என் தமிழன்னை.
இவள்
தையில் பிறந்த
தையல் என்றும்
தமிழருள்
ஓர்
கருத்துண்டு.
தையோ
சித்திரையோ
அவள்
என் அன்னை.
அவள்
ஈன்றெடுத்த
தமிழர் குலம்
தரணியெல்லாம்
செழிக்கச் செய்யும்
தரணியைத்
தழைக்கச் செய்த
தமிழர் குல நிலை...?
பிரிவினை என்பதே
தமிழரின்
தலைவிதியாய்
மாறிப்போன
மாயமென்ன?
தமிழன்னை
ஈன்றெடுத்த
தவப்புதல்வனே...
நம்
தாயகத்தை
சற்றே
நினைத்துப்பார்.
ஆரிய திராவிட மாயைகள்
ஆதனால் பிறந்த கயவர்கள்...
தமிழினத்தை
மோதவிட்டு
தம்மினத்தைக்
கொழுக்கச் செய்த புல்லர்கள்...
அன்னையின்
பெயரைச் சொல்லி
அடுக்கடுக்காய்
கொள்ளையடித்த
அரசியல் கூட்டம்...
புறப்படு தமிழா
புதியதோர் களம் காண.
ஓன்று சேர்
தமிழினமே.
மாயைகள் செய்து
உன்னை
மாளச்செய்தோரைக்
கவிழ்த்திடவே..
புதியதோர்
இவ்வாண்டில்
புரட்சியை விதைத்திடுவோம்
புதியதோர்
தமிழகம் காண
புறப்பட்டு வா
தமிழினமே...
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-04-10