எங்கே தொடங்கும் ? ... எங்கே முடியும் ? ....
உள்ளத்தின் தவிப்புகள்
உணர்ச்சித் துடிப்புகள்
உண்மையின் விழிப்புகள்
எங்கே தொடங்கும்? எங்கே முடியும்?
கண்களில் நீர்த்துளி
பாசத்தின் தேன்துளி
பருவத்தின் காதல்துளி
எங்கே தொடங்கும்? எங்கே முடியும்?
மூடாத விழிகளின் இரவுகள்
தேடாத சொந்தத்தின் உறவுகள்
பாடாத ராகத்தின் கீதங்கள்
எங்கே தொடங்கும்? எங்கே முடியும்?
வேண்டாத வேலைக்குக் கூலி
தாண்டாத எல்லைக்கு வேலி
தீண்டாத நீருள்ள ஏரி
எங்கே தொடங்கும்? எங்கே முடியும்?
எங்கோ தொடங்கி
எங்கோ முடியும்
ஏதோ நிகழ்வுகளுக்காக
ஏனிந்த ஏக்கம்
எனக்கின்று பகர்வீரோ?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-03-20